தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் முன்னிலையில் காதல் ஜோடிக்கு திருமணம் - காதல் திருமணம்

நாகை: வேதாரண்யத்தில் காவலர்கள் முன்னிலையில் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.

காதல் ஜோடி
காதல் ஜோடி

By

Published : Oct 8, 2020, 2:11 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தேவகுமார் (32). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் தேவகுமாரின் பெற்றோருக்குத் தெரியவர, இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேவகுமாருக்கு அவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவைக்க முயற்சித்துள்ளனர்.

இதனை அறிந்த விஜி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் காவல் நிலையம் அருகில் இருக்கும் கற்பக விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.

ABOUT THE AUTHOR

...view details