தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் வீட்டை இடித்து நாசம் செய்த லாரி ஓட்டுநர்! - Mayiladuthurai district

மயிலாடுதுறையில் குடிபோதையில் நிலைத்தடுமாறி லாரியை வீட்டின் சுவரில் மோதிய ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டின் மேல் லாரி
வீட்டின் மேல் லாரி

By

Published : Oct 8, 2020, 4:44 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே குடிபோதையில் ஓட்டுநர் லாரி ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் மோதியுள்ளார்.

அருகே மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜி(45). இவர் நேற்று(அக்.7) இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது செம்பனார்கோவில் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த லாரி வீட்டு வாசலில் இருந்த மரத்தில் மோதி பின் சுவரில் மோதியுள்ளது.

திடீரென்று சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் பின்பக்கம் ஓடியுள்ளனர். லாரி மோதியதில் ராஜியின் வீட்டு முன்பக்க சுவர், மேற்கூரை வீட்டின் இரண்டு கேட்டுகள் இடிந்து விழுந்து. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் ஆகியவை சேதமடைந்த தோடு வீட்டிலிருந்த வாசிங்மிஷின் என பலப் பொருட்கள் சேதமடைந்துள்ளது.

வீட்டின் மேல் லாரி

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரிக்கையில், இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த செந்தில்குமார் எனவும், மேலும் இவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்து மோதியதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...!

ABOUT THE AUTHOR

...view details