தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோக் அதலாத் மூலம் மயிலாடுதுறையில் ஒரே நாளில் 60 வழக்குகளுக்கு சமரச தீர்வு

நாகப்பட்டினம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 60 வழக்குகள் இன்று (டிசம்பர் 12) ஒரே நாளில் சமரச தீர்வு காணப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய மக்கள் நீதிமன்றம்

By

Published : Dec 12, 2020, 8:10 PM IST

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் மயிலாடுதுறை தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் சீர்காழி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வகையான 10 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டடு, சுமார் 4 லட்சத்து 5 ஆயிரத்து 283 ரூபாய் அளவுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

இதே போல் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் தரணிதரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குடும்பநல வழக்குள், காசோலை வழக்குகள் மற்றும் சமரசத்திற்குரிய சிறிய குற்ற வழக்குகள் என இதில் 33 வழக்குகளில் சுமுகமாக தீர்வு காணப்பட்டு அபராத தொகையாக ரூ.22 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. சமரச தீர்வு தொகையாக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழக்காடிகள் பயனடையும் வகையில் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டது.

தரங்கம்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் 17 வழக்குகளில் 19 ஆயிரத்து 180 ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளிலும் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சீறிப்பாயும் நீர்... கொசஸ்தலை ஆற்றை கடந்து சென்ற இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details