தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மானியத்துடன் டீசல் கடன் வழங்கும் திட்டம்: கனரக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! - பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்

நாகை: பாரத் பெட்ரோலியம் நிறுவனமும், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து, கனரக வாகன ஓட்டிகளுக்கு மானியத்துடன் டீசல் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Mayiladuthurai petrol loan at concession rate

By

Published : Sep 21, 2019, 11:53 PM IST

இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனமும், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து கனரக வாகன ஓட்டிகளுக்கு டீசல், லிட்டருக்கு 75 பைசா முதல் 1.45 பைசாவரை மானியத்துடன் கடனாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Mayiladuthurai petrol loan at concession rate heavy duty vehicles

நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலுள்ள சம்பந்தம் பெட்ரோல் ஏஜென்சியில் இத்திட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. ஸ்ரீராம் நிறுவனம், தங்களிடம் கடன்பெற்று வாகனங்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இச்சலுகையினை அளிக்க முன்வந்துள்ளது. கிரெடிட் கார்டு போன்று கனரக வாகன ஓட்டிகள் பெறும் டீசலும், அவர்களது கணக்கில் கடனாக சேர்த்துக்கொள்ளப்படும். மாதந்தோறும் தவணையுடன், இந்த டீசல் கடனையும் திருப்பி செலுத்தலாம். மேலும் புதிய வாடிக்கையாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நாடு முழுவதும் உள்ள பாரத் பெட்ரோல் நிலையங்களில், வாகனஓட்டிகள் இந்த சேவையை பெறலாம். இத்திட்டம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளத் திட்டமாக இருக்கும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனமும், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இத்திட்டம் பற்றி அறிந்ததும், பெட்ரோல் பங்க்கில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/international/america/saudi-drone-oil-facility-attack-detalis/tamil-nadu20190916132520419

ABOUT THE AUTHOR

...view details