தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல மாதங்களாக கலை நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருந்துவரும் சூழலில் இசை, நாடக கலைஞர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள இசை, நாடகக் கலைஞர்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மச்சாரி ஸ்ரீதேஜ் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
நிவாரணப் பொருள்கள் வழங்கிய வாழும் கலை அமைப்பு நிவாரணப் பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள மனமில்லாத நாடகக் கலைஞர்கள் வாழும்கலை அமைப்பினருக்கு நன்றி செலுத்தும்விதமாக சிவன், பார்வதி, பவளக்காளி பச்சைக்காளி, கரோனா வைரஸ், எமன், சித்திரகுப்தன் வேடம் அணிந்து கரோனா விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.
இதையும் படிங்க: புதிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்