மயிலாடுதுறை:சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு காவலர்கள், நேற்று (மார்ச் 1) வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு லாரியை மறித்து சோதனையிட முயன்றனர்.
காவலர்களை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர், சற்று தூரம் சென்று லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது லாரியை சோதனை செய்த காவலர்கள், லாரியில் சுமார் 90 பெட்டிகளில் 4,300 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.