தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2019, 3:21 PM IST

ETV Bharat / state

நாகையில் நூதன முறையில் மதுபானம் கடத்தல் - 150 லிட்டர் மதுபானம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகை அருகே மேல் அங்கியில் நூதன முறையில் மதுபான கடத்தலில் ஈடுபட்ட நபரிடமிருந்து 150 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

liquor
liquor

காரைக்காலில் இருந்து மதுபானங்களை நாகை மாவட்டத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடத்தலை தடுப்பதற்காக நாகை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேலவாஞ்சூர் அடுத்த முட்டம் பேருந்து நிலையம் காவல்துறையினர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் ஓவர்கோட் அணிந்து வந்தவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவரது உடலில் மறைத்து கொண்டுவரப்பட்ட 150 லிட்டர் மது பாட்டில்கள் இருந்துள்ளது.

மதுபானம் கடத்தியவர் கைது

அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்ததில் மன்னார்குடி, கீழபாலத்தை சேர்ந்த ஜெயபால் என்பதும், காரைக்கால் கீழவாஞ்சூரில்யிருந்து மது பாட்டில்களை மன்னார்குடிக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க...

சசிகலாவை விடுதலை செய்யக்கோரி நடுரோட்டில் வீச்சரிவாளுடன் இளைஞர் ரகளை

ABOUT THE AUTHOR

...view details