தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்கால் டு மும்பை: ரயிலில் கடத்தப்பட்ட மதுபானங்கள் - காரைக்கால் டூ மும்பை

காரைக்காலிலிருந்து நாகப்பட்டினம் வழியாக மும்பைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற மதுபானங்களை நாகப்பட்டினம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல்செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மும்பைக்கு ரயில் மூலம் மதுபாட்டில் கடத்தல்  karaikal railway station  railway station  liquor seized  liquor  liquor seized in karaikal railway station  ரயிலில் கடத்தப்பட்ட மதுபானங்கள்  மதுபானங்கள் கடத்தல்  காரைக்கால் டூ மும்பை  காரைக்கால் டூ மும்பை மதுபானம் கடத்தல்
கடத்தல்

By

Published : Oct 5, 2021, 11:46 AM IST

Updated : Oct 5, 2021, 2:06 PM IST

நாகப்பட்டினம்: காரைக்காலிலிருந்து மும்பைக்கு, நாகப்பட்டினம் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர், காரைக்கால் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மும்பை புறப்படத் தயாராக இருந்த ரயிலில், ஒன்பது பைகள் மட்டும் தனியாக இருப்பதைக் கண்ட, காவல் துறையினர், அதனை எடுத்து சோதனை செய்தனர்.

ரயிலில் கடத்தப்பட்ட மதுபானங்கள்

அதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 111 உயர் ரக வகை மாதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்த நாகப்பட்டினம் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர், மதுபானங்களைக் கடத்திச்செல்ல முயன்ற கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

Last Updated : Oct 5, 2021, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details