நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.
இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அந்த மதுபானத்தை திறக்காமல் வைத்துள்ளார். மேலும் அவர் அரசு மதுபானக்கடைகளில் பிராந்தி, விஷ்கி, ரம் உள்ளிட்ட மதுபான பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, கூடுதலாக 5 ரூபாயும், பீர் மதுபானத்திற்கு 10 ரூபாயும் பெறுவதாக குற்றம் சாட்டினர்.