நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருப்பவர் ரமேஷ்குமார்.
இவரிடம் சிவநேசன் (42) என்பவர், கபிரியேல் தங்களிடம் பேசவேண்டும் எனக் கூறினார் என்று செல்போனை ரமேஷிடம் கொடுத்துள்ளார்.
செல்போனில் பேசிய கபிரியேல், “ரூ.25 ஆயிரம் பணம் கொடுக்கவேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ்குமார், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதேபோல், மயிலாடுதுறை புதுபேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்வையாளராக இருக்கும் சந்திரவேல் (45) என்பவரையும் மிரட்டி இந்தக் கும்பல் ரூ.20 ஆயிரம் பணம் பறித்துள்ளது.
இவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இருபுகாரின் அடிப்படையில் காவலர்கள் சிறையிலுள்ள கபிரியேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவரின் கூட்டாளியான சிவநேசன், செல்வம் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான விஜயை தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டிய கபிரியேல் கைதி கபிரியேல் சென்னை புழல்சிறையிலிருந்து செல்போனில் தொடர்புக்கொண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் மயிலாடுதுறை வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் தொழில் செய்ய தடை