தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி

நாகப்பட்டினம்: வலிவலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 43 ஆண்டுகளாக தனது உறவினர்கள், நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதியும், பண்டிகையின்போது வாழ்த்துகளும் அனுப்பிவருகிறார்.

By

Published : Jan 13, 2020, 7:47 PM IST

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி
வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தங்களது பாசம், வேதனை, மகிழ்ச்சி ஆகியவற்றை கடிதங்கள் மூலம் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதி வெளிப்படுத்தினர். அப்போதெல்லாம் பலரும் தபால்காரருக்காக வீட்டின் முன்பு காத்திருந்த சூழ்நிலை எல்லாம் இருந்தது. பலரும் கடிதங்களை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்துவருகின்றனர்.

தற்போது, இ-மெயில், வாட்ஸ் ஆப், பேஸ்புக், ஹைக், டெலிகிராம் போன்ற செயலிகள் வந்ததால், தற்போதைய இளைய சமுதாயத்திடம் கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளது. பொதுமக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல பகுதியில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பின்றி வீணாகி வருவதையும் நாம் கண்கூடாக காண முடிகிறது.

வாழ்த்து கடிதங்களுக்கு உயிர் கொடுக்கும் விவசாயி

கடிதங்கள் மூலமாக தகவல் பரிமாற்றம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அதற்கு மாறாக 43 ஆண்டுகளாக கடிதங்கள் எழுதியும், கடிதங்களில் வாழ்த்துக்கள் அனுப்பியும், நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா வலிவலத்தைச் சேர்ந்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சேரன் இருக்கிறார். சுமார் நூறு கடிதங்களை அனுப்பிவந்த இவர் தற்போது ஆயிரத்திற்கும்மேல் கடிதங்களை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவருகிறார். இச்செயலானது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது..

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details