கரோனா நோய்த்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கை, உச்ச நீதிமன்றம் சரி வரக் கையாளவில்லை என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து, முன்னாள் நீதிபதிகளை விமர்சித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.
பிரசாந்த் பூஷண் வழக்கு - வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - Nagapattinam district
நாகப்பட்டினம்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Lawyers association protest in Nagapattinam district
இதனைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் மீதுள்ள நீதிமன்ற அவதிமதிப்பு வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.