மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 2.20 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா தாளடி நடவு பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 282 கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 526 ரூபாய் பரிமீயம்தொகை செலுத்தி பயிர்காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
பயிர்காப்பீடு செய்வதற்கு விஏஓ வழங்கும் சிட்டாஅடங்கல், வங்கி பாஸ்புத்தகம் நகல், ஆதார்அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து முன்மொழிவு விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்யும் போது நிலத்தின் புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்ததுகொள்ள வேண்டும்.