தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் சூடுபறக்கும் நிலஅபகரிப்பு அரசியல்! - land grabbing Against DMK

நாகை: கோயில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெறப்பட்டதாக அதிமுக, திமுகவினர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

land
land

By

Published : Sep 18, 2020, 5:26 PM IST

நாகை, ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்‌. மணியன், மாவட்டத்தில் கோயில் நிலம் பட்டாவாக மாற்றப்பட்டுள்ளதாகப் பகீர் தகவலைத் தெரிவித்தார். அமைச்சர் பேசியதையடுத்து நிலம் விவகாரம் குறித்து விசாரணை செய்ய வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் பிரவின் பி நாயர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதிமுக நாகை நகரச் செயலாளர் தங்ககதிரவன், வேளாங்கண்ணியில் இரஜதகிரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய இடம், அரசு புறம்போக்கு இடத்தை திமுக கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் ஆக்கிரமித்து பட்டா பெற்று தனது குடும்பத்தினர் பெயருக்கு மாற்றி உள்ளதாக, மாவட்ட நில அபகரிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் இளங்கோ, அமர்நாத் ஆகியோர் வேளாங்கண்ணியில் இரஜதகிரீஸ்வரர் கோயில், வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், அரசு புறம்போக்கு, கடற்கரைப் பகுதி, வனத் துறைக்குச் சொந்தமான இடங்களை அமைச்சர் ஓ.எஸ்‌. மணியன் உதவியாளர் கண்ணன் உள்பட அதிமுக பிரமுகர்கள் 8 பேர் ஆக்கிரமித்து பட்டா மாற்றம்செய்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்து அந்த இடங்களில் அரசு விதிமுறைகளுக்கு மாறாக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு காவல் துறையிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இருதரப்பையும் அழைத்து விசாரித்துவருகின்றனர். இரு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் மாறி மாறி நில அபகரிப்பு புகார் அளித்திருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details