நாகப்பட்டினம்மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமானது. பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு தமிழக அரசால் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அரசு மருத்துவமனைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் 70 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், 70 செவிலியர்களும், 40 மருத்துவர்கள் உள்ளதாகவும், அதிலும் 34 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:IRCTC: போலி ஐஆர்சிடிசி ஆப் மூலம் பயணிகளை குறிவைத்து பலே மோசடி.. எச்சரிக்கும் சைபர் போலீஸ்!
மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிபடுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மயிலாடுதுறை மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை என்று நோயாளிகளை கொண்டு வந்தால் முதலுதவி அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக 80 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை அரசு மருத்துவமனைக்கும், 40 கி.மீ தொலைவில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல வேண்டி அறிவுறுத்தப்படுதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.