நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வாய்க்கால்களில் செடிகளை அகற்றி, மதகுகளை சரிசெய்யும் பணிகள் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளன.
ரூ.8 கோடி செலவில் 41 இடங்களில் குடிமராமத்து பணிகள் தொடக்கம் - kudimaramathu schemes
நாகை: மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்டம் சார்பிலும், விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் 41 இடங்களில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள் சார்பில், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணியின் ஒப்பந்த தொகையில் விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவீதமும், மீதமுள்ள 90 சதவீதம் அரசாங்க பணமும் சேர்த்து இந்த பணிகள் நடைபெறுகின்றன.
காவிரி வடிநிலக் கோட்டம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில், மாத்தூர், ஆதனூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடி செலவில் நடைப்பெற்று வரும் இந்த பணிகள் மூலம் ஆறுகள், வாய்க்கால்கள் பராமரிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.