தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி அருகே ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் மகா குடமுழுக்கு விழா

சீர்காழி அருகே உள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 22, 2022, 12:53 PM IST

மயிலாடுதுறை : சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆக.20 ஆம் தேதி குடமுழுக்குவின் ஒரு பகுதியாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து இன்று (ஆக.22) புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் மகா குடமுழுக்கு விழா

இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details