தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரசை தடுக்குமா கபசுரக் குடிநீர்? - coronavirus safety

நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி கபசுரக் கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.

corona
corona

By

Published : Mar 18, 2020, 5:18 PM IST

உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வைரசால் தற்போது வரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பிற மாநிலங்களை விட குறைவுதான் என்றாலும், முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதனிடையே, நாகப்பட்டினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாவட்ட சித்த மருத்துவமனை இணைந்து, நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் ’கபசுரக் குடிநீர்’ எனும் கசாயத்தினை வழக்குரைஞர், பொதுமக்களுக்கு மாவட்ட நீதிபதி பத்மநாபன் வழங்கினார்.

இந்த கசாயம் வைரஸ் சார்ந்த தொற்று ஏற்படுவதைத் தடுப்பதாகவும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கரோனா வைரசால் விமானங்கள் ரத்து - மலேசியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்...

ABOUT THE AUTHOR

...view details