நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் இரண்டாவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு, கூறைநாடு ஜமாத் தலைவர் சபீர் அகமது தலைமை வகித்தார்.