நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு, கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் மார்ச் 31 வரையில் பார்வையாளர்கள் சரணாலயத்துக்குள் அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கரோனாவால் மூடப்பட்ட கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம்
நாகை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம் மூடப்பட்டது.
kodiyakkarai-sanctuary
மேலும், இங்குள்ள அரிய வகை இனமான வெளிமான் உள்ளிட்ட காட்டு விலங்குகளுக்கு பார்வையாளர்களால் தொற்று பரவாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனசரகர் அயூப்கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால உதவித் தொகை ரூ.88.41 கோடி’
TAGGED:
kodiyakkarai sanctuary