தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களுடன் முடிவுற்ற ‘கோடை விழா-2023’ - traditional dance

மயிலாடுதுறையில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்ற கோடை விழா-2023 வெகுசிறப்பாக நடைபெற்றது.

16 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள்: 270 கலைஞர்கள் பங்கேற்ற ‘கோடை விழா-2023’
16 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள்: 270 கலைஞர்கள் பங்கேற்ற ‘கோடை விழா-2023’

By

Published : Jun 26, 2023, 10:09 AM IST

16 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள்: 270 கலைஞர்கள் பங்கேற்ற ‘கோடை விழா-2023’

மயிலாடுதுறை:இந்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான ‘கோடை விழா-2023’ கலைநிகழ்ச்சி மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23ம்தேதி தொடங்கியது.

இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களைச் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் வண்ணமயமான பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று (ஜூன் 25) இந்நிகழ்ச்சியின் நிறைவு நாள். அதனால் உத்தரகாண்ட், கர்நாடகா, ஆந்திரா, கோவா மற்றும் ஒடிசா மாநில கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான சபேலி நடனம் ஆடப்பட்டது.

இதையும் படிங்க:இளம் பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி நடத்திய கோத்தகிரி கிராம மக்கள்!

கர்நாடகா மாநில கொடவ பெண்கள் பாரம்பரிய உடை மற்றும் நகைகள் அணிந்து ஆடிய உம்மத்தட்டா நடனம், ஆந்திர மாநில கலைஞர்கள் தலையில் பித்தளை பாத்திரத்தை வைத்துக் கொண்டு கை-கால்களை வேகமாக அசைத்த போதும், தலையை அசைக்காமல் ஆடிய கரகாலு நடனத்தில், தலையில் 4 அடுக்கில் பாட்டில்களை நிலைநிறுத்தி மகுடி வாசிப்புக்கேற்ற வகையில் ஆடிய நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஷிதலாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் படாய் நாட்டுப்புற நடனத்துக்கு அவ்வூர் கலைஞர்கள் நடனமாடினர். கோவா மாநில கலைஞர்கள் சிக்மோ திருவிழாவின்போது ஆடும் சமை (விளக்கு) நடனம், ஒடிசா மாநில கலைஞர்கள் ஆடிய ஒடிசி கிளாசிக்கல் நடனத்தின் முன்னோடி நடனம் எனக் கூறப்படும் கோட்டிபுவா நடனத்தில் பெண்வேடமிட்டு உடலை வில்லாக வளைத்து ஆடிய நடன நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தி வெகுவாக கவர்ந்தன.

இந்த நிகழ்ச்சியை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய அதிகாரி நாதன், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

இதில் திரளான கலை ரசிகர்கள் பங்கேற்று நடனங்களை கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:500 மதுக்கடைகள் மூடப்பட்டது ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details