திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன்.03) கொண்டாடப்படுகிறது. இதனை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கருணாநிதி பிறந்தநாள்: அம்மா உணவகத்திற்கு நிதி வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ! - congress mla rajakumar
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை அம்மா உணவகத்தில் ஒரு மாதத்திற்கான உணவுக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கருணாநிதி பிறந்தநாள்- அம்மா உணவகத்திற்கு நிதி வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ
அதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜகுமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்மா உணவகத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவு வழங்க ஒரு லட்சத்து எட்டாயிரத்து 400 ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ராஜகுமார் இத்தொகையினை நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் வழங்கினார்.
இதையும் படிங்க:கலைஞரின் பிறந்தநாள்: அரசின் பல்வேறு புதிய அறிவிப்புகள்