தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உதயநிதி கருத்தில் ஒத்துப்போகிறேன்" - கரம் கோர்க்கும் கார்த்தி சிதம்பரம்!

Karti Chidambaram: சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப் போகிறேன் என காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

karthik chidambaram
கார்த்திக் சிதம்பரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 7:49 PM IST

கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கு கரையில் 108 திவ்ய தேசங்களில் 22 -வது தலமும், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கல சாசனம் செய்யப்பட்ட, சந்திர சாப விமோசன தலமான இக்கோயிலில் இன்று எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தனது பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆயுள் ஹோமம் மற்றும் 60, 70, 80, மற்றும் 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். மேலும் பல்வேறு சிறப்புகளை இக்கோயிலுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கோ பூஜை,கஜ பூஜை செய்து வழிபட்டார்.

இதையும் படிங்க:டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவு.. சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி‌அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்து வழிபட்டார். மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

முன்னதாக பரிமளரெங்கநாதர் கோயில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்; “நடைமுறை பேச்சு வழக்கில் இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதிகாரபூர்வமாக முழுவதும் மாற்றுவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அச்சடித்துள்ள ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பேங்க் ஆப் பாரத் என மாற்றுவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதேபோல பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாற்ற பெரிய செலவு ஏற்படும். எனவே அது சாத்தியமில்லை.

"ஒரே நாடு ஒரே தேர்தல்" பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு சாத்தியமில்லாதது. தமிழ்நாட்டில் அரசியல் மேடையில் பேசப்படும் சனாதனம் என்பது நமது வழிபாட்டு முறையும் அல்ல கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல. சமுதாயத்தில் நிலவும் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியது.

சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப் போகிறேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் தமிழிசை ஆகியவர்கள் புதிதாக சனாதனத்துக்கு கொடி பிடிக்கிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:"சனாதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசுகிறார்" - டிடிவி தினகரன் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details