தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் தர்ணா - வாடகை கார் மாயம்

நாகப்பட்டினம்: வாடகைக்கு கார் எடுத்து காருடன் மாயமானவரை கண்டுபித்துத் தர கோரி காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்
தர்ணா போராட்டம்

By

Published : Sep 30, 2020, 8:43 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், மாதா கோயில் வீதியை சேர்ந்தவர் செல்வசுந்தரம். தினக்கூலியாக வேலை பார்த்து வந்த இவர் போதிய வருமானம் இல்லாததால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதற்காக தனது மனைவியின் நகை, இரண்டு பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேர்த்து வைத்த பணம் மேலும் சிலரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் பெற்று ஆறு லட்ச ரூபாயில் கார் ஒன்று வாங்கி ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், காரைக்கால் மார்க்கெட் வீதியை சேர்ந்த ராஜா என்பவர் அவரிடம் காரை லீசுக்கு கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என செல்வசுந்தரத்திடம் ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி காரை வாங்கி சென்று தலைமைறைவாகியுள்ளார்.

ராஜாவை, எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்து பல மாதங்கள் கடந்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் புதுச்சேரி ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் என்று பலரிடம் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் இதுவரை செல்வசுந்தரத்தின் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனது காரை உடனடியாக மீட்டு தரவேண்டும் எனக்கூறி செல்வசுந்தரம் காரைக்கால் நகர காவல் நிலையம் முன்பு அவருடைய மனைவி, இரண்டு மகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தான் கடன் பெற்ற பல நபர்கள் பணத்தை கேட்டு தன்னை மிரட்டுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் இல்லாததால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் உள்ளே அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனையும் காவலர்கள் கண்டுபிடித்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details