தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் தொடுவாய் மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல்! - karaikal fisherman attacked other fisheries at mid of sea

நாகப்பட்டினம்: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தொடுவாய் மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

By

Published : Mar 2, 2020, 6:37 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சித்ரவேல் , பழனிவேல், சின்னையன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொது, அவ்வழியே அரசால் தடைசெய்யப்பட்ட அதிக வேகத்திறன் கொண்ட விசைப்படகில் வந்த காரைக்காலைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம், கபிலன் என்ற பெயருடைய விசைப்படகுகள் தொடுவாய் மீனவர்களின் பைபர் படகுகளை சேதப்படுத்தியது மட்டுமின்றி வலைகள் அறுத்தும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

தொடுவாய் மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல்

இந்தத் தாக்குதலில் தொடுவாய் மீனவர்களின் படகுகள், கருவிகள் என சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரையோரம் படுகுகளை நிறுத்தி வேலை நிறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல் மற்றும் காவல் துறையினர், மீனவர்களிடையே விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண்: மடக்கிப்பிடித்த மதுரை காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details