புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 40ஆக உயர்ந்துள்ளது.
காரைக்காலில் இரண்டாயிரத்தை கடந்த கரோனா தொற்று - காரைக்கால் மாவட்ட செய்திகள்
புதுச்சேரி: கடந்த ஒருவார காலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, காரைக்கால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
![காரைக்காலில் இரண்டாயிரத்தை கடந்த கரோனா தொற்று Nagai Corona Update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:15:15:1600857915-tn-ngp-03-karaikal-corona-increase-script-7204630-23092020155038-2309f-01523-1014.jpg)
Nagai Corona Update
இதில் ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 604 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 33 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, காரைக்கால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.