கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல் துறையினர் நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் இருந்து வாஞ்சூர் வழியாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு அதிகளவில் மக்கள் செல்வதாக புகார்கள் எழுந்தன.
அனுமதி அட்டை இல்லாமல் வாகனங்கள் எல்லைக்குள் என்ட்ரி; தடுத்து நிறுத்திய ஆட்சியர் - Karaikal Collector who stopped vehicles crossing the state border without a permit
நாகப்பட்டினம்: அனுமதி அட்டை இல்லாமல் மாநில எல்லையைத் தாண்டி வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி மீண்டும் தமிழ்நாட்டுப் பகுதிக்குச் செல்ல காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அவ்வழியே அனுமதி அட்டை இல்லாமல் வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்திய ஆட்சியர், வாகனங்களை மீண்டும் நாகைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
சோதனையின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், காரைக்காலில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, பச்சை மண்டலமாக நீடிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சென்னை உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காரைக்காலுக்கு வந்த 513 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.