நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி, கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464ஆவது கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை சென்றது.