நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, தேமுதிகவின் 15ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகிய இரு விழாவையும் முன்னிட்டு, மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் தேமுதிக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜலபதி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் போடியில் நாகை, கடலூர், தஞ்சாவூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஏராளமான பார்வையாளர்கள் கபடி போட்டியை கண்டுகளித்தனர்.