நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் மாலி ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
'வீட்டிற்கு ஒரு யானை கொடுப்பேன் என முதலமைச்சர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' - CPM State Secretary K. Balakrishnan's campaign
தேர்தலுக்காக மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் அள்ளித் தெளித்துவரும் எடப்பாடி பழனிசாமி, வீட்டிற்கு ஒரு யானை கொடுப்பேன் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
நாகை மாவட்டம் சிக்கலில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "சாமானிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் டீசலின் விலையை உயர்த்தி விட்டு தேர்தலுக்காக ஆறு எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் எனக் கூறி மக்களை முதலமைச்சர் பழனிசாமி ஏமாற்றுகிறார்.
விட்டால் ஒவ்வொரு வீட்டுக்கும் யானை இலவசமாகக் கொடுப்பேன் என எடப்பாடி கூறினாலும் கூறுவார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச செல்போன் கொடுப்பேன் என்று பொய் வாக்குறுதிகளைக் கூறினார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றி வருகிறார்" என்று விமர்சித்தார்.