தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சசிகலா விடுதலைக்குப் பின்....' - ஜெயானந்த் திவாகரன் பேட்டி - admk sasikala

மயிலாடுதுறை: திமுக தேர்தலில் வெற்றிபெறும் என்ற கருத்து நிலவி வருவதாகவும், ஆனால் பிரிந்துள்ள அதிமுக ஒன்று சேர்ந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு துண்டிக்கப்படும் என்று அதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்தார்.

ஜெயானந்த் திவாகரன்
ஜெயானந்த் திவாகரன்

By

Published : Nov 4, 2020, 8:48 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுதாகரன் முன்னிலையில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் ஜெயானந்த் திவாகரன் கலந்துகொண்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், சசிகலாவின் வருகைக்குபின் அவர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அண்ணா திராவிடர் விடுதலை கழகத்தின் நிலைபாடு குறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

ஜெயானந்த் திவாகரன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக தேர்தலில் வெற்றிபெறும் என்ற கருத்து நிலவி வருவதாகவும், ஆனால் பிரிந்துள்ள அதிமுக ஒன்று சேர்ந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு துண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை தேர்தலில் திமுகவே வெற்றி பெறும்! - சசிகலா தம்பி திவாகரன்

ABOUT THE AUTHOR

...view details