தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்தி பாடல்கள் பாடி கோயிலில் வழிபட்ட ஜப்பான் நடிகை... - actress Miya Saki Masumi

ஜப்பானில் தமிழ் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து அரிசியை கொண்டு வந்து ஆலயங்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கிய ஜப்பான் நடிகை, மயிலாடுதுறை ஆலயத்தில் நெஞ்சுருக தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை கோயிலில் ஜப்பானிய நடிகை மனமுருகி தமிழ் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு
மயிலாடுதுறை கோயிலில் ஜப்பானிய நடிகை மனமுருகி தமிழ் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு

By

Published : Nov 12, 2022, 6:25 AM IST

Updated : Nov 12, 2022, 10:53 AM IST

ஜப்பானை சேர்ந்தவர் பிரபல நடிகை மியா சாகி மசூமி. தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி கேள்விப்பட்டு ஜப்பானில் அவர்கள் பற்றி அறிந்து கொண்ட அவர், தொடர்ந்து ஜப்பானில் உள்ள ஹராமுரா என்ற தனது சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் இருப்பது போல் நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல் பயிர் செய்ததாகவும், அந்த பயிருக்கு முருகா என்று பெயரிட்டு அறுவடை செய்துள்ளார். அறுவடை செய்த நெல்லை அரிசி ஆக்கி தமிழகத்திற்கு எடுத்து வந்து பல்வேறு ஆலயங்களுக்கும் அளித்து வருகிறார்.

அதன்படி நேற்று மயிலாடுதுறை சென்ற ஜப்பான் நடிகை மற்றும் அவரது ஐந்து பேர் கொண்ட குழுவினர் மாயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சன்னதியில் ருத்ர யாகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை கோயிலில் ஜப்பானிய நடிகை மனமுருகி தமிழ் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு

பின்னர் தருமபுரம் ஆதீனத்திற்கு நேரில் சென்று ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்று தனது வயலில் விளைந்த முருகா நெல்லின் அரிசியை காணிக்கையாக சமர்ப்பித்தார்.

ஜப்பானில் முருகன் ஆலயம் அமைக்க உள்ளதாகவும் அதற்கு ஆதீனம் வருகை தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆதீனம் சார்பில் ஜப்பான் நடிகைக்கு முருகன் சிலை மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக மயூரநாதர் ஆலயத்தில் முருகன் மற்றும் சிவன் குறித்து தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபட்டார்.

ஜப்பான் நடிகை பேசும்போது தமிழ் மொழி கலாச்சாரம் தன்னை கவர்ந்ததாகவும், இது பற்றி படிக்க ஆரம்பித்த பின்னரே தனக்கு மன நிம்மதி கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - சீர்காழி அருகே என்.ஐ.ஏ. சோதனை

Last Updated : Nov 12, 2022, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details