நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, ராமக்கண்ணு, சம்பந்தன் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 அதிவேக படகுகளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீனவர்களின் படகைச் சுற்றி வளைத்துள்ளனர்.
கடலில் மீனவர்களை மிரட்டி வலைகள் கொள்ளை: நடவடிக்கை எடுக்ககோரி அமைச்சரிடம் மனு - அமைச்சர் ஓ எஸ் மணியன்
நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீனவர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள வலைகளைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் கத்தி, இரும்புக் குழாய் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகில் ஏறி மீனவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகளைப் பறித்துகொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 7) நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், மீனவர்களை மிரட்டி வலைகளைப் பறித்துச் சென்ற நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரமான வலைகள் கிடைக்க அரசு உதவ வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.