நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால், அதிமுக , திமுக, சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சிக்கல், பொரவச்சேரி, ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொரவச்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாலதி ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்தார். வாக்கு சேகரிப்பின்போது ஆழியூர் அருகே நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.