நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை அடுத்துள்ள ஆத்துபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், சிவபிரகாஷ். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர், சௌமியா என்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காதல் விவகாரம் சௌமியா வீட்டிற்கு தெரிந்த நிலையில், அவரது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் சௌமியாவிற்கும் அவரது தாய்மாமாவிற்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய சௌமியா, சிவ பிரகாஷை அருகில் இருந்த கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.