மயிலாடுதுறை: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே, தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. அங்கு பணம் எடுக்கச் சென்ற இளைஞர், பணத்தை எடுத்து வீட்டு வெளியேறினார்.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில், சாலை கடக்கக் காத்திருந்தார். அந்த சாலையில் வாகன நெரிசல்கள் அதிகம் இருந்ததால், வேகமாக சாலையைக் கடக்க அவர் முற்பட்டார்.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்
அப்போது வேகமாக சாலையைக் கடந்த இளைஞர், வாகனத்தைத் திருப்ப முயன்ற நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவர் பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்... இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரைப் பதைபதைக்க வைத்துள்ளது. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள், பெற்றோர் வாகனத்தை செலுத்துகையில் இருபுறமும் பார்த்து கவனமாக செலுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகம் முன் கத்தி குத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்