நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த மடப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்துவருகிறார்.
இவர்கள் வசிக்கும் பகுதிக்கு கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின்கீழ் கடந்த வாரம் வாழக்கரையிலிருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.
இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக திருக்குவளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் ரமேஷ் உள்பட 7 குடும்பத்தினர் பயன்படுத்திவந்த பாதையை சபாநாதன் கம்பி வேலி கொண்டு அடைத்தார். இதனால் அவர்கள் வெளியே செல்ல முடியாமலும், குடிநீர் இன்றியும் சிரமம் அடைந்துவருகின்றனர்.