அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அதன் கிளை தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். அவருடன் மருத்துவர்கள் முத்து, மருதப்பன், பரத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.