நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட துணைச்செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட வலியுறுத்தியும், மயிலாடுதுறையிலிருந்து சேத்தூர் வரை செல்லும் அரசுப் பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.