இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தகுந்த இடைவெளியுடன் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகை!
நாகப்பட்டினம்: சுதந்திர தின விழாவையொட்டி நாகையில் தகுந்த இடைவெளியுடன் காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில், முகக் கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் காவலர்கள் பங்கேற்றனர்.
ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகையில், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க் காவல்படை காவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், சுதந்திர தின விழாவில் மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.