தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை : தமிமுன் அன்சாரி வரவேற்பு! - பப்ஜி செயலி தடை

நாகப்பட்டினம் : மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதித்ததை வரவேற்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

By

Published : Sep 3, 2020, 9:11 PM IST

சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு டிக்டாக் போன்ற செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது விளையாட்டுப் பயனர்களின் ஆதர்ச விளையாட்டான பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தடை விதிப்பை வரவேற்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுச் செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

நேற்று (செப்.02) அவற்றை மத்திய அரசு தடை செய்திருப்பதை வரவேற்கிறோம். பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களை தவறான திசையில் இந்தச் செயலிகள் வழிநடத்தி வந்துள்ளன.

இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன், இது போன்ற அம்சங்களுடன் வேறு புதிய செயலிகளை வரவிடாமல் தடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும்.

இதற்கு மாற்றாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போன்ற கள விளையாட்டுகளையும், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல், கேரம் பலகை விளையாடுதல் போன்ற இதர விளையாட்டுகளையும் தங்கள் பிள்ளைகள் மத்தியில் ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details