காரைக்கால் மாவட்டம் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் இல்லாத நிலையில், நேற்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் கைதான ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவரை விசாரணை செய்த திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்பட காவல் நிலையத்தில் பணிபுரியும் 32 காவலர்களையும் தனிமைப்படுத்தியதோடு, திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு சீல் வைத்துள்ளனர்.