நாகை மாவட்டம் புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் தமிழ்நாட்டில் வறட்சி நீங்க மழைப் பொழிய வேண்டும், கடல் வளம் பெருகி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இயற்கை சீற்றங்களிலிருந்து காத்திட வேண்டும் உள்ளிட்டவற்றை வேண்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் வறட்சி நீங்க மழை பொழிய சிறப்பு வழிபாடு - prayer
நாகை : புதிய ஒளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் மழைவேண்டி பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
பால்குடம் எடுத்து வழிபாடு
ஏழைப் பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயம் வரை பால்குடம் எடுத்து வந்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.