நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி ஸ்ரீநல்ல நாயகி அம்மன், ஸ்ரீ பொறையான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உற்சவம் நடைபெறும். இதில் முக்கிய விழாவான தேர்திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் அம்மன் அருள் பாலித்தார்.
மயிலாடுதுறை அருகே பங்குனி திருவிழா கோலாகலம்!
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே பங்குனி தேர் திருவிழாவையொட்டி சாமியை கிராமம் கிராமமாக தோளில் சுமந்து மக்கள் வீதியுலா சென்றனர்.
பங்குனி தேர் திருவிழாவில் தேர்களை மக்கள் தோளில் சுமந்து வீதியுலா சென்றனர்
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் கிராம மக்கள் சாமியை தோள்களில் தூக்கி மணக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீதியுலாவாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.