நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் - nagai dmk campaign
நாகப்பட்டினம்: உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்த இடத்தில் திரைப்பட வெளியீட்டை போன்று அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கட்அவுடுக்கு பால் அபிஷேகம்
உதயநிதி ஸ்டாலின் பரப்புரையைக் காண, திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் அங்கு திரண்டிருந்தனர். அப்போது உற்சாக மிகுதியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த அவரின் முழு உருவ கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் பாலை வீண் செய்வதை கண்டு முகம் சுளித்துச் சென்றனர்.