நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ குபேரன் பஞ்சபாண்டவர்கள் வணங்கிய பழமைவாய்ந்த பிரகன் நாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
நாகை: வைகாசி விசாக பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் - nagai vaikasi festival
நாகை: தெற்கு பொய்கை நல்லூர் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழா மே 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் பத்தாம் முக்கிய நாளில் தீமிதி விழா நடைபெற்றது. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் சக்தி கரகம், அலகுக் காவடி ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.