நாகை மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களான செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பா பயிர்களில் கதிர் வரும் இந்த சூழலில் பயிர்களை எலிகள் கடித்து நாசப்படுத்தி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.
மேலும், நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஆட்களுக்கு கூலி தந்து எலி கிட்டிவைத்து எலிகளைப் பிடித்து வருகின்றனர். தற்போது சம்பா நெல் சாகுபடியில் களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற பணிகளுக்கு செலவு செய்துள்ள நிலையில் தற்போது கதிர் விடும் சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்வதால், தங்களுக்கு இந்த ஆண்டு பெரும் மகசூல் குறைவு ஏற்படும். இதனால் கடன் பெற்று பயிர் செய்த தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.