மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிட ராமதாஸ் என்பவர் வேட்புமனு தாக்கல்செய்ய மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 19) வந்து காத்திருந்தார். உடன் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன், மாவட்டத் தலைவர் மணிகண்டன் வந்திருந்தனர்.
அப்போது வேட்புமனு தாக்கல்செய்ய காத்திருந்த வேட்பாளர் ராமதாசை அழைக்காமல், அவருக்குப் பின்னால் வந்த வேட்பாளரை வேட்புமனு தாக்கல்செய்ய அழைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்குப் பின்னால் வந்த வேட்பாளரை அழைத்ததால் இந்து முன்னணி வேட்பாளர் தர்ணா! இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல்செய்ய அழைத்ததன்பேரில், உள்ளே சென்று தேர்தல் அலுவலர் பாலாஜியிடம் வேட்பாளர் ராமதாஸ் மனு தாக்கல்செய்தார்.
இதையும் படிங்க..இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்