மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா மருதம்பள்ளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான கந்தன் (60) என்பவர் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
பலமுறை சாராய வியாபாரி கந்தனை காவல் துறையினர் கைது செய்த போதிலும் கால்களில் உள்ள காயங்களின் காரணமாக கிளை சிறைச்சாலை முதல் மத்திய சிறைச்சாலைகள் வரை கந்தனை அழைப்பு காவலுக்கு எடுத்துக் கொள்வதில்லை.
இதனால் காவல் துறையினர் அவர் மீது அபராதம் செலுத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கந்தன் சாராயம் விற்குமிடத்தில் சாராய விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் என்பவரிடம் சிலர் குறைவான பணத்தை கொடுத்து சாராயம் வாங்கியுள்ளனர்.