மயிலாடுதுறை மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக மழை வெள்ளம், குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் சூழ்ந்துள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராதாநல்லூர் கிராமத்தில் வாய்க்கால் உடைப்பால் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளையும், வெள்ள நீரில் மூழ்கிய பயிர்களையும் பார்வையிட்டார்.
மத்திய மண்டல ஐஜி ஜெயராம் ஆய்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது வெள்ள நீரில் சிக்கித்தவித்த இரண்டு ஆடுகளை காவல் துறையினர் மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கும்படி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: புரெவி புயல் முன்னெச்சரிக்கை: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் டிஐஜி ஆய்வு